×

அரசியல்வாதியை மணக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

 

பிரபல பாலிவுட் நடிகையான பரீனிதி சோப்ரா, ஆம் ஆத்மி எம் பி ராகவ் சதாவை திருமணம் செய்யப்போவதாக தகவல் வந்துள்ளது.

பாலிவுட்டில் 2011 ஆம் ஆண்டு வெளியான லேடீஸ் Vs ரிக்கி பாய் படத்தின் மூலமாக அறிமுகமாகி சுதேசி ரொமான்ஸ், கேசரி, மேரி பியாரி பிந்து போன்ற படங்களில் நடித்து  சூப்பர் ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருபவர்  ப்ரீனிதி சோப்ரா.  இவரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்பி ராகவ் சதாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. தொடர்ந்து இருவருக்கும் நச்சயதார்த்தம் எப்போது நடக்கும் என செய்திகள் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இவர்களது நிச்சயம் முடிந்துவிட்டதாவும், அதில் இருவீட்டார் மட்டுமே கலந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி ஷாக் கொடுத்தது.

இந்த நிலையில் இருவர் வீட்டிலும் திருமண வேலைகள் படு தூளாக நடந்து வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக இந்த ஜோடி  மும்பையில் உள்ள பிரபல பேஷன் டிசைனர் மணீஷ் மல்ஹோத்ராவின் இல்லத்திற்கு வந்துவிட்டு சென்றதாகவும். இதில் திருமணத்திற்கான ஆடைகள் குறித்து பேசிவிட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் நடக்க இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.