×

அக்ஷய் குமாரின் லக்ஷ்மி பாம்ப் ஓடிடி-யில் வெளியாகிறது… ரிலீஸ் தேதி உறுதியானது!

அக்ஷய் குமார் நடித்துள்ள ‘லக்ஷ்மி பாம்ப்’ படம் ஓடிடி-யில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ‘லக்ஷ்மி பாம்ப்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னதாக லக்ஷ்மி பாம்ப் படம் செப்டம்பர் 9-ம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்திருந்தனர். பின்னர் படக்குழு டிஜிட்டல் வெளியீடு முடிவை கைவிட்டு படத்தை
 

அக்ஷய் குமார் நடித்துள்ள ‘லக்ஷ்மி பாம்ப்’ படம் ஓடிடி-யில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ‘லக்ஷ்மி பாம்ப்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

முன்னதாக லக்ஷ்மி பாம்ப் படம் செப்டம்பர் 9-ம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்திருந்தனர். பின்னர் படக்குழு டிஜிட்டல் வெளியீடு முடிவை கைவிட்டு படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது.

தற்போது லக்ஷ்மி பாம்ப் திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நவம்பர் 9-ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டீசருடன் வெளியிட்டுள்ளார்.