×

ஆமா, சோனு சூட் இவ்ளோ உதவி பண்றாரே, அவருக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது!?

நடிகர் சோனு சூட் மக்களுக்கு செய்யும் உதவிகளுக்கு, ‘அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவருடைய சொத்து மதிப்பு என்ன’? போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் எழ ஆரம்பித்துள்ளது. சோனு சூட் கொரோனா காலத்தில் மக்கள் பலருக்கு தொடர்ந்து உதவியுள்ளார், உதவி வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு, தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இந்த ஊரடங்கில் அவர்
 

நடிகர் சோனு சூட் மக்களுக்கு செய்யும் உதவிகளுக்கு, ‘அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவருடைய சொத்து மதிப்பு என்ன’? போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் எழ ஆரம்பித்துள்ளது.

சோனு சூட் கொரோனா காலத்தில் மக்கள் பலருக்கு தொடர்ந்து உதவியுள்ளார், உதவி வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு, தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இந்த ஊரடங்கில் அவர் செய்த உதவி தாராளம், அதனால் பலனடைந்தோர் ஏராளம். இன்னும் எவ்வளோவோ உதவிகள் செய்துள்ளார், செய்து வருகிறார்.

சமீபத்தில் ஐ.நா-வின் சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருதையும் பெற்றார். தற்போது இணையத்தில் ஒரு சில கேள்விகள் நெட்டிசன்களால் முன்வைக்கப்படுகின்றன.

சோனு சூட் மக்களுக்கு எவ்வளவோ உதவிகள் தாராளமாக செய்து வருகிறார். இவற்றுக்கெல்லாம் அவருக்கும் எப்படி பணம் கிடைக்கிறது. அவருடைய சொத்து மதிப்பு தான் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இதே கேள்வியை சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் முன் வைத்தபோது, ​​சோனு தன்னிடம் போதுமான அளவு நிதி இருப்பதாகவும் மக்களுக்கு உதவி செய்ய பலரிடமிருந்து நிதி உதவியைப் பெறுவதாகவும் கூறியுள்ளார்.

“எங்கள் குடும்பம் பல்வேறு தொழில்களில் செய்து வருகிறோம். எனக்கும் மாடலிங் மற்றும் திரைப்படங்களிலிருந்து நல்ல சம்பாத்தியம் கிடைக்கிறது. எனவே, நான் சம்பாதித்த பணத்துடன் தொண்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினேன்.

இது பலரின் கூட்டு முயற்சி மற்றும் பலரின் அன்பும் ஆதரவும் காரணமாக நான் இன்று இங்கே இருக்கிறேன் என்று நம்புகிறேன். மேலும், நான் செய்து வரும் அனைத்து உதவிகளுக்கும் நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பலர் ஆதரவளித்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.” என்றுதெரிவித்துள்ளார் .

அரசியலில் நுழைவதற்காகத் தான் இந்த உதவிகளெல்லாம் செய்து வருகிறீர்களா? என்ற கேள்விக்கு, நான் எதையும் எதிர்பார்த்து இந்த உதவிகளைச் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தன்னை அணுகி கட்சியில் சேர அழைத்ததாக அவர் ஒப்புக்கொண்டார். சோனு அவர்களின் அழைப்பை மரியாதையுடன் நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.