×

ரசிகர்களுக்கு பேக் டூ பேக் ட்ரீட் கொடுக்கத் தயாராகும் ஹ்ரித்திக் ரோஷன்!

 

பாலிவுட்டில் பிரபல நடிகர்களின் ஒருவர் ஒருவர் ஹிருத்திக் ரோஷன். அவர் நடிப்பில் கடைசியாக படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. 2019 ஆம் ஆண்டில், ரித்திக் ரோஷன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகின. அதில் 'சூப்பர் 30' திரைப்படம் வெற்றி பெற்றது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான 'வார்' திரைப்படம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் ஹிருத்திக் தற்போது 4 பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த நான்கு படங்களில் இரண்டு இரண்டாம் பாகங்கள், ஒரு ரீமேக், ஒரு அசல் படம். 

வார் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹ்ரித்திக் நடிக்க உள்ளார். பின்னர் 'க்ரிஷ்' படத்தின் நான்காவது பாகத்திலும் நடிக்க உள்ளார். தற்போது அவர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும்  ஃபைட்டர் படத்தில் நடித்து வருகிறார். நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். 

அதையடுத்து விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். திரைப்படங்களைத் தவிர, ஹிருத்திக் ரோஷன் டாம் ஹிடில்ஸ்டனின் 'தி நைட் மேனேஜர்' சீரிஸின்  இந்தி ரீமேக் மூலம் ஓடிடி தளத்திலும் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.