×

சோனு சூட் கலை மற்றும் மனிதநேயத் துறை – மீண்டும் மீண்டும் உயரத்திற்கு போகும் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி என அணைத்து உதவிகளையும் செய்து வந்தார். இவரது சமூக சேவையைப் பாராட்டி சமீபத்தில் ஐ.நா அமைப்பு அவருக்கு சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருது அளித்தது.இவரிடம் உதவி பெற்ற மக்களும் தங்கள் நன்றிக்கடனை
 

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி என அணைத்து உதவிகளையும் செய்து வந்தார்.

இவரது சமூக சேவையைப் பாராட்டி சமீபத்தில் ஐ.நா அமைப்பு அவருக்கு சிறந்த மனிதநேய செயல்பாட்டாளருக்கான விருது அளித்தது.இவரிடம் உதவி பெற்ற மக்களும் தங்கள் நன்றிக்கடனை உரிய முறையில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு உயர்கல்வி நிறுவனம் அவர்களின் கலை மற்றும் மனிதநேயத் துறைக்கு சோனு சூட்டின் பெயரை வைத்து நடிகருக்கு பெருமை சேர்த்துள்ளது.

சமீபத்தில் இதேபோன்று தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனில் குமார் என்பவர் சைனீஸ் பெயரில் இருந்த தனது உணவகத்தின் பெயரை சோனு சூட் என்று மாற்றியுள்ளார். மேலும் அங்கிருக்கும் மெனு, பேனர் என எல்லாவற்றிலும் சோனு சூட்டின் புகைப்படங்களை வைத்துள்ளார். நான் கடவுளைப் பார்த்ததில்லை, ஆனால் நான் நிஜ வாழ்வில் ஒரு கடவுளைக் கண்டேன், அது சோனு சூட் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதையெல்லாம் பார்க்கும்போது சோனு சூட்டப்பற்றி தெரியாதவர்களுக்கும் அவர் மீதான மரியாதை பெருகிவிடும் போல் இருக்கிறது.