×

நானும் சென்னைப் பையன் தான்... லால் சிங் சத்தா விழாவில் நடிகர் நாகசைதன்யா!

 

உலகம் முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் இந்தி ரீமேக் தான் 'லால் சிங் சத்தா'. ஆமீர் கான் மற்றும் கரீனா கபூர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்வைத் சந்தன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

விழாவில் பேசிய நாகசைதன்யா 

"அனைவருக்கும் வணக்கம். உதயநிதி ஸ்டாலின் சார், எஸ் ஜே சூர்யா சார் அவர்களுக்கு வணக்கம். ஒரு காலத்தில் நானும் சென்னை பையன் தான், சென்னைக்கு வந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நான் தமிழ் ஏதாவது தப்பா பேசினால் மன்னித்து விடுங்கள். சென்னை எனக்கு மிகவும் நெருக்கமானது. 18 வருடங்கள் இங்கே தான் படித்தேன்.

எனது சினிமா கேரியர் ஆரம்பித்த பிறகு முதல் முறை இங்கு வருகிறேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரி படத்திற்காக உங்களுடன் வந்து பேசுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. லால் சிங் சத்தா எனது சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும்.


ஆமீர் சார் மற்றும் படக்குழுவினரிடம் இருந்து இந்தப் படத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.  ஒரு அற்புதமான படத்தை உங்களுக்கு கொடுத்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நீங்கள் அனைவரும் கண்டிப்பாக படத்தை தியேட்டரில் போய் பார்க்க வேண்டும். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிடுவது எங்களுக்கு மிகவும் பெருமை. உங்களின் ஆதரவுக்கு நன்றி" என்று பேசினார்.