×

“மகேஷ் பட் என்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்”… ஆலியா பாட் தந்தை மீது நடிகை பகிரங்க குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு சிபிஐ விசாரணையில் போதைப்பொருள் கோணத்திற்கு மாறியது. அதையடுத்து இந்த வழக்கில் ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பிரபலங்களின் பெயர் போதைப்பொருள் விவகாரத்தில் வெளியானது. முக்கியமாக இந்த வழக்கில் பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட் தான் சுஷாந்த் மரணத்திற்குக் காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகை லூவினா லோத், மகேஷ் பட்டின் உறவினரான ஸ்மித் சபர்வால் என்பவரைத் திருமணம்
 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு சிபிஐ விசாரணையில் போதைப்பொருள் கோணத்திற்கு மாறியது. அதையடுத்து இந்த வழக்கில் ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பிரபலங்களின் பெயர் போதைப்பொருள் விவகாரத்தில் வெளியானது.

முக்கியமாக இந்த வழக்கில் பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட் தான் சுஷாந்த் மரணத்திற்குக் காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகை லூவினா லோத், மகேஷ் பட்டின் உறவினரான ஸ்மித் சபர்வால் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். பின்னர் தனது கணவர் போதைப்பொருள் கடத்தல் செய்வதாக லுவினா வெளிப்படுத்தினார்.

லூவினா லோத், மகேஷ் பட் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தற்போது தன்னை மகேஷ் பட் துன்புறுத்துவதாக லுவினா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து லுவினா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கூறியிருப்பதாவது ;

“நான் மகேஷ் பட்டின் உறவினரான ஸ்மித் சபர்வால் என்பவரைத்தான் திருமணம் செய்து கொண்டேன். பின்னர்தான் அவர் போதைப்பொருள்கள் கடத்தல் செய்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது. போதைப்பொருள்கள் சப்ளை செய்வதுடன் பெண்களை வைத்து தொழிலும் செய்து வருகிறார்.இதனால் அவரைப் பிரிந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து உள்ளேன்.

மகேஷ் பட்டை பொறுத்தவரை பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய டான். அவர் சொன்னபடி நடக்காவிட்டால் அதன் பிறகு நான் அங்கு நிலைத்திருக்க முடியாது. அவர் என்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார். இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றாலும் அவர்கள் என்னுடைய புகாரை ஏற்கவில்லை. எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் அதற்கு மகேஷ் பட் மற்றும் அவரை சேர்ந்த இன்னும் நான்கு பேர் தான் பொறுப்பு” என்று லுவினா தெரிவித்துள்ளார்.