×

‘நான் ஒரு நடிகனாகவே இருக்க விரும்புகிறேன்”… அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு சோனு சூட்டின் பதில்!

ஊரடங்கு காரணமாக இந்தியா முழுதும் உள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இதனால் நிஜ வாழ்க்கையிலும் அவர் ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார். அவர் அரசியலில் இணையப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் தனியார் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளம்(Podcast) ஒன்றில் நடந்த நேரலை நிகழ்ச்சியில் நடிகர் சோனு சூட் கலந்து கொண்டு பேசினார். “கடந்த 10 வருடங்களாவே அரசியலில் நுழைய பல்வேறு வாய்ப்புக்கள் கிடைத்தன. மேலும் நான் ஒரு நல்ல தலைவனாக இருக்கமுடியும்
 

ஊரடங்கு காரணமாக இந்தியா முழுதும் உள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இதனால் நிஜ வாழ்க்கையிலும் அவர் ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார். அவர் அரசியலில் இணையப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தனியார் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளம்(Podcast) ஒன்றில் நடந்த நேரலை நிகழ்ச்சியில் நடிகர் சோனு சூட் கலந்து கொண்டு பேசினார்.

“கடந்த 10 வருடங்களாவே அரசியலில் நுழைய பல்வேறு வாய்ப்புக்கள் கிடைத்தன. மேலும் நான் ஒரு நல்ல தலைவனாக இருக்கமுடியும் என்று பலர் என்னிடம் கூறினார்கள். ஆனால் நான் ஒரு நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். நான் அடைய வேண்டிய இலக்கு இன்னும் அதிகம் உள்ளது.  நான் விரும்பும் பல செயல்களை செய்ய வேண்டியுள்ளது. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் நுழையலாம். ஆனால் நான் ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய விரும்பவில்லை.

ஒருவேளை அரசியலுக்கு வந்தால் நான் என்னுடைய 100 சதவீத உழைப்பை வழங்குவேன். யாருக்கு எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன். நான் அவர்களின் பிரச்சினையை தீர்ப்பேன். ஆனால் அதற்கு நிறைய நேரம் தேவைப்படும். எனவே, தற்போது நான் அதற்கு தயாராக இல்லை என்று நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முதன் முதலாக விஜயகாந்த் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்றதையும் பகிர்ந்து கொண்டார்.