×

‘மயிலு’ ஸ்ரீதேவி மகள் வாங்கிய ஆடம்பர அபார்ட்மெண்ட்… விலையைக் கேட்டால் அதிச்சியாவது நிச்சயம்.!?

கோடம்பாக்கத்து நடிகர்களுக்கு எல்லாம் நீலாங்கரை தொடங்கி கானாத்தூர் வரை உள்ள ஏரியாக்களில் பங்களா கட்ட வேணும் என்பது எப்படி கனவோ, அதைப்போலத்தான் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மும்பை ஜூஹூ பீச் ஏரியாவும். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொடங்கி முன்னணி நட்சத்திரங்கள் பலரும் அங்கே வீடு வைத்திருப்பதை ஸ்டேட்டஸ் சிம்பலாக கருதுகிறார்கள். அந்த ஏரியாவில் சாதாரணமானவர்கள் எல்லாம் வீடு வாங்குவதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது என்றால் எவ்வளவு விலை இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்! அங்கேதான் மிகப்
 

கோடம்பாக்கத்து நடிகர்களுக்கு எல்லாம் நீலாங்கரை தொடங்கி கானாத்தூர் வரை உள்ள ஏரியாக்களில் பங்களா கட்ட வேணும் என்பது எப்படி கனவோ, அதைப்போலத்தான் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மும்பை ஜூஹூ பீச் ஏரியாவும். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொடங்கி முன்னணி நட்சத்திரங்கள் பலரும் அங்கே வீடு வைத்திருப்பதை ஸ்டேட்டஸ் சிம்பலாக கருதுகிறார்கள்.

அந்த ஏரியாவில் சாதாரணமானவர்கள் எல்லாம் வீடு வாங்குவதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது என்றால் எவ்வளவு விலை இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்! அங்கேதான் மிகப் பெரிய அபார்ட்மெண்டில் 14, 15, 16 என மூன்று தளங்களையும் சேர்த்து கட்டப்பட்ட ட்யூப்லெக்ஸ் அபார்ட்மெண்ட்டை வாங்கி, கடந்த டிசம்பர் மாதம் ரெஜிஸ்ட்ரார் ஆபிஸில் பதிவு செய்திருக்கிறார். இதுதான் பாலிவுட்டின் இப்போதைய பரபரப்பு.

ஷாஷாங்க் கைத்தான் இயக்கத்தில் இஷான் கட்டருடன் இணைத்து நடித்த ‘தடக்’ படம்தான் ஜான்வி கபூர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படம். அதற்கப்புறம் சொல்லிக்கொள்ளும்படியாக பெரிய படங்கள் இல்லையென்றாலும் வெப் சீரிஸ் நிறைய பண்ணிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் எப்படி இவ்வளவு ஆடம்பரமான பங்களா வாங்க முடிந்தது என்பதுதான் ‘பரபர’ பேச்சுக்கு காரணம்!

சினிமாவில் மட்டும்தான் ஒருத்தனோ,ஒருத்தியோ நல்லா வாழ்ந்தால் அதற்கு காரணம் தேடி அலைவதில் ஆளாளுக்கு ஆர்வம் காட்டுவார்கள். அதற்கு ஜான்வி கபூர் மட்டும் விதிவிலக்காக இருந்துவிட முடியுமா.?! சரி, எவ்வளவு விலைக்கு வாங்கினார் என்பதைச் சொல்லவில்லையே… அதிகமில்லை மக்கா, ஜஸ்ட் முப்பது ஒன்பது கோடிதான்! பத்திர செலவு மட்டுமே எழுபத்தி எட்டு லட்சம். இதில் கூடுதல் தகவல் என்னன்னா… ஹிருத்திக் ரோஷன் சமீபத்தில்தான் இதே ஏரியாவில் 97 கோடிக்கு ஒரு வீடு வாங்கினார்.