×

கர்ப்பத்தைக் கலைத்தாரா விஜய் பட நடிகை… அவரே சொன்ன உண்மை!

நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதைக் கருக்கலைப்பு செய்ததாகவும் வெளியான செய்திகள் குறித்து மனம் திறந்துள்ளார். நடிகை இலியானா தமிழில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படம் தான் இலியானா கடைசியாக நடித்த தமிழ் படம். சமீப காலமாக இலியானா பற்றி அதிக செய்திகள் வெளியாகி வருகின்றன. இலியானா கர்ப்பமாக இருந்ததாகவும் பின்னர் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூட செய்திகள் வெளியாகி வருகின்றன. இலியானா
 

நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதைக் கருக்கலைப்பு செய்ததாகவும் வெளியான செய்திகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகை இலியானா தமிழில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படம் தான் இலியானா கடைசியாக நடித்த தமிழ் படம்.

சமீப காலமாக இலியானா பற்றி அதிக செய்திகள் வெளியாகி வருகின்றன. இலியானா கர்ப்பமாக இருந்ததாகவும் பின்னர் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூட செய்திகள் வெளியாகி வருகின்றன.

இலியானா இந்த செய்திகள் குறித்து மனம் திறந்துள்ளார். “நான் கர்ப்பமாக இருந்தேன், கருக்கலைப்பு செய்தேன் என்று செய்திகள் பரவுகின்றன. இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற செய்திகளைப் பார்க்கும் போது மிகவும் வினோதமாக இருக்கிறது. நான் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஒரு செய்தி இருக்கிறது. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. நான் தற்கொலை செய்ய முயற்சி செய்து பின்னர் உயிர்பிழைத்ததாக என் வீட்டு வேலையாள் கூறியதாகவும் கூறப்படுகிறது. எனக்கு வேலையாட்களே கிடையாது. நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன். இந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவர்கள் எங்கிருந்து இதுபோன்ற தகவல்களைப் பெறுகிறார்கள் என்று கூட எனக்குத் தெரியவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.