×

இந்தியாவின் ஆஸ்கர் கனவிற்கு உறுதுணையாக நிற்கும் ஆவணப்படம்!

 

ஆஸ்கர் விருதுக்காக இறுதி போட்டிக்கு தேர்வான படங்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் பட்டியல் நேற்று மாலை வெளியானது. சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் இருந்ததால் அந்தப் படம் இந்திய ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஜெய் பீம் திரைப்படம் இறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

மேலும் மோகன்லால் நடிப்பில் வெளியான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படமும் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் இந்தியாவின் ஆஸ்கர் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு ஆவணப்படம் ஆஸ்கர் விருது விழாவிற்கு இறுதிக்கட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 'ரைட்டிங் வித் ஃபயர்' என்ற ஆவணப்படம் சிறந்த டாக்குமென்ட்ரி பிரிவில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

டில்லியைச் சேர்ந்த சுஸ்மித் கோஷ் மற்றும் ரின்டு தாமஸ் இருவரும் இணைந்து உருவாகியுள்ள இந்தப் படம் கலந்துகொண்ட 138 படங்களில் இருந்து 15 படங்களளிலும் அதிலும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 5 படங்களில் ஒன்றாகவும் தேர்வாகியுள்ளது.

"இந்தியாவில் உருவான ஆவணப்படம் ஒன்று ஆஸ்கர் விருதில் இறுதி கட்ட நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளது இதுவே முதல் முறை. எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய சினிமாவுக்கு இது முக்கியமான தருணம். தலித் பெண் பத்திரிக்கையாளர்களை பற்றிய படம் இது. வலி என்றால் என்ன என்பதையும் இந்த கால இந்தியப் பெண்களைப் பற்றிய படமாக இந்த படம் உருவாகியுள்ள"து என்று சுஸ்மித் கோஷ் தெரிவித்துள்ளார்