×

 ஒரு போஸ்ட்டுக்கு கோடிகளில் சம்பளமா ?.. இணையத்தை அதிர வைக்கும் நடிகை !

 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போடுவதற்கு பிரபல பாலிவுட் நடிகை கோடிகளில் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரு கருத்தை பதிவிடவும், தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கணக்கு வைத்திருக்கிறார். இவர்களை ஏராளமானோர் ஃபாலோவர்களாக உள்ளனர். அதிலும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

பொதுவாக இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் கருத்தை பதிவிடவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்டுகளை பதிவிட பலகோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா. அது உண்மைதான். அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும் பிரபலங்கள் தங்களின் தயாரிப்புகளை விளம்பரம் செய்ய வியாபார நிறுவனங்கள் இந்தத் தொகையை வழங்குகின்றன. இந்நிலையில் 2021-ல் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்களின் 100 பேர் பட்டியலை Hopper HQ நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வருட பட்டியலில் முதலிடத்தில் உள்ள கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ, ஒரு கோடியே அறுபது லட்சம் யுஎஸ் டாலர் சம்பளமாக பெறுகிறார்.  இரண்டாவது இடத்தில் ஹாலிவுட் நடிகர் ட்வெய்னி ஜான்சன் உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இந்த பட்டியலில் 12.5 கோடி பேர் ஃபாலோயர்கள் பெற்று கிரிக்கெட் வீரர் வீராத் கோலி 19-வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு சுமார் 5 கோடிகள் கொடுக்கப்படுகிறது.  27-வது இடத்தில் இருக்கும் ப்ரியங்கா சோப்ராவை 6.4 கோடி பேர் ஃபாலோ செய்கிறார்கள். இவர் ஒரு போஸ்டுக்கு சுமார் 3 கோடிகள் வாங்குகிறார். இதேபோன்று ப்லோவர்களை பொறுத்து பிரபலங்கள் சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.