×

கொரோனாவைத் தொடர்ந்து சினிமாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஐபில் போட்டிகள்!

ஐபில் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்க இருப்பதால், OTTயில் வெளியாவதாக இருந்த படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்துத் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. 5 மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.விதிமுறைகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, தியேட்டர்களைத் திறக்க எப்போது அனுமதி தரும் எனத் தெரியவில்லை. இதனால், OTTயில் படங்களை வெளியிட படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி, ஹாலிவுட் படங்கள்
 

ஐபில் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்க இருப்பதால், OTTயில் வெளியாவதாக இருந்த படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்துத் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. 5 மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
விதிமுறைகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, தியேட்டர்களைத் திறக்க எப்போது அனுமதி தரும் எனத் தெரியவில்லை.

இதனால், OTTயில் படங்களை வெளியிட படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி, ஹாலிவுட் படங்கள் கூட OTTயில் வெளியிடப்பட்டு வருகின்றன. ‘OTTயில் படங்களை வெளியிட மாட்டோம்’
என அதிகாரபூர்வமாக அறிவித்த தெலுங்குத் தயாரிப்பாளர்கள் கூட, தற்போது தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு OTTயில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதற்கு ஏற்றதுபோல OTT தளங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே உள்ள அமேசான், ஜீ5, ஹாட் ஸ்டார், நெட் ப்ளிக்ஸ் மட்டுமின்றி, பல்வேறு புதிய OTT தளங்கள் தற்போது உருவாகியுள்ளன.
தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குநர் ராம்கோபால் வர்மா உள்ளிட்டோரும் புதிய OTT தளங்களை உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில், விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருப்பதால், OTTயில் வெளியிட தேதி அறிவிக்கப்பட்ட படங்கள், தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில்
வெளியாவதாக இருந்த ‘லக்‌ஷ்மி பாம்’, ‘பூஜ்’, ‘தி புக் பில்’ ஆகிய படங்களில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, தியேட்டர்கள் திறக்கப்பட்டிருந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகாது. வசூல் குறையும் என்பதால் இப்படிச் செய்வார்கள். இதே முறைதான் OTT
ரிலீஸிலும் பின்பற்றப்படுகிறது.

கொரோனவால் மிகப்பெரிய சோதனையைச் சந்தித்துள்ள சினிமாத்துறை, OTT ரிலீஸ் மூலம் கொஞ்சம் மீண்டு வருகிறது. ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளால் சினிமாத்துறைக்கு மறுபடியும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.