×

"ஆபாச வெப்சைட்டில் எனது புகைப்படங்கள்….."- பரபரப்பை கிளப்பிய ‘ஜான்வி கபூர்’.

 

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் ஜான்வி ஆபாச வெப்சைட்டில் தனது புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டு உலா வருவதாக பரபரப்பு குற்றசாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜான்வி கபூர் அளித்த பேட்டியில், “சமீபகாலமாக AI தொழில்நுட்பம்  சர்வ சாதாரணமாக மாறியுள்ளது. குறிப்பாக என்னை பெரிய அளவில் பயமுறுத்தும் ஒன்றாக உள்ளது. உதாரணமாக நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது, எனது பெற்றோருடன் பொதுவெளியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நானும் நடிகையாக ஆசைப்படுவதாக யாஹூ வலைதளத்தில் செய்தி வெளியானதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அதுமட்டுமல்லாமல் எனது புகைப்படங்கள் ஆபாச வலைதளத்தில் மார்ஃபிங் செய்யப்பட்டு உலா வருகிறது.” என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.