×

ஆட்டம் போட நேரம் வந்தாச்சு! – ‘ஜவான்’ படத்தின் ‘வந்த எடம்’ வீடியோ பாடல் வெளியீடு.

 

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. சுமார் 250 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்திலிருந்து ‘வந்த எடம்’ என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகிபாபு, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம்  இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அட்லீயின் முதல் பாலிவுட் படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு  அதிகமாக உள்ளது. குறிப்பாக படத்தின் முன்னோட்ட வீடியோ யூடியூப்பில் வெளியாகி 112 பார்வையாளர்களை கடந்தது. இந்த நிலையில் படத்தின் ‘வந்த எடம்’ பாடம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஷாருக்கானின் ஆட்டம் அட்டகாசமாக அமைந்துள்ளது.