×

இணையத்தை வட்டமடிக்கும் ‘ஜவான்’ பட புதிய போஸ்டர்.

 

ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் அதிரடி அக்ஷன் படமாக  தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. ‘பதான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் இந்த படம் உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. டிரைலர், போஸ்டர் என அடுத்தடுத்து படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும் நிலையில் தற்போது ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா என மூவரின் மாஸ் லுக்கில் புது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.


வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில்  ஜவான் படம்  வெளியாக உள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு அனைத்தும்  முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மாறுபட்ட தோற்றத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி உள்ளனர். நயன்தாரா கெத்தாக கையில் கன்னேடு நிற்கிறார். இந்த போஸ்டர் இணையத்தில் அதிகம் வாட்டமடித்து வருகிறது. தொடர்ந்து ஷாருக்கானின் பதான் படம் போலவே ஜவான் படமும் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.