கல்லாகட்டும் ‘ஜவான்’- சும்மா அதிருதுல்ல….
ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் வெளியான ஜவான் படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஷாருக்கானின் நடிப்பில் வெளியான ‘பதான் ‘ படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியால் ‘ஜவான் ‘ படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக அட்லீ, நயன்தாரா மற்றும் அனிருத்துக்கு பாலிவுட்டில் இது முதல் படம். படத்தில் யோகிபாபு, பிரியாமணி, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி என பலரும் நடித்த ‘ஜவான்’, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்லவிமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி வெளியான ஜவான் படம் முதல் நாளில் ரூ.150 கோடி வசூலித்தது, தொடந்து படிப்படியாக வசூல் சாதனையை உயர்த்திய இந்த படம் தற்போது உலக முழுவதும் ரூ.660.03 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ஷாருக்கானின் ஜவான் விரைவில் ரூ.1000 கோடி கிளப்பில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.