×

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி!

 

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகத் தெரிந்தாலும் பலர் அதனால் தற்போதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட் திரைத்துறை பிரபலங்கள் பலர் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 

கரீனா கபூர் கான், ஷனாயா கபூர், அர்ஜுன் கபூர் மற்றும் பலர் உட்பட பல பிரபலங்கள் கொரோனாவால் கடந்த சில  நாட்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “நான் 3 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவருடன் தொடர்பு கொண்டேன். எனக்கும் ப்ரியாவுக்கும் கோவிட் தொற்று இருப்பது சோதனையில் உறுதியானது. நாங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம், எனவே வேறு யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் தடுப்பூசி ஏற்கனவே போட்டிருக்குகிறோம். தற்போது லேசான அறிகுறிகளை அனுபவித்திருக்கிறோம். தயவு செய்து நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்."என்று தெரிவித்துள்ளார்.