×

'கைதி' இந்தி ரீமேக்கில் ஐட்டம் பாடல்... செம்ம டான்ஸ் போட்ட பிரபல நடிகை !

 

'கைதி' படத்தின் இந்தி ரீமேக்கில் ஐட்டம் பாடல் ஒன்று‌ இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘கைதி’. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, முழுக்க ஆக்ஷ்ன் மட்டுமே இருந்தது.

முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட அந்த ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி ரீமேக் செய்து வருகிறார். ‘போலா’ என்ற பெயரில் இந்தியில் தயாராகி வரும் இப்படத்தை இயக்கி நடித்து வருகிறார் அஜய் தேவ்கன். 

நடிகை தபு இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜய் தேவ்கன் பட நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாம். இந்த பாடலுக்கு ராய் லட்சுமி செம்ம டான்ஸ் ஆடியுள்ளாராம். இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.