×

சாதனை படைத்த ஐஸ்வர்யா ராஜேஷின் ‘கனா’… இந்தியில் இப்படி ஒரு வரவேற்பா ?

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ படம் இந்தியில் சாதனை படைத்துள்ளது. கிரிக்கெட் வீராங்கனையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘கனா’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண்ராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், தர்ஷன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.பிரொக்ஷன் நிறுவனம் தயாரித்தது. திபு நின்னான் தாமஸ் இசையில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனும், அவரது மகளும் இணைந்து ஒரு பாடலை பாடியிருந்தனர்.
 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ படம் இந்தியில் சாதனை படைத்துள்ளது.

கிரிக்கெட் வீராங்கனையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘கனா’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண்ராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், தர்ஷன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.பிரொக்ஷன் நிறுவனம் தயாரித்தது.

திபு நின்னான் தாமஸ் இசையில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனும், அவரது மகளும் இணைந்து ஒரு பாடலை பாடியிருந்தனர். கிரிக்கெட் வீராங்கனையாக பல தடைகளை மீறி ஒரு கிராமத்து பெண் எப்படி சாதிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இன்னொரு பக்கம் விவசாயத்தையும், விவசாயி படும் இன்னல்களையும் காட்டியிருந்தார் இயக்குனர்.

ரசிகர்களின் ஆதரவை பெற்று மாபெரும் ஹிட்டடித்த இப்படத்தை இந்தியில் ‘நாட் அவுட்’ என்ற பெயரில் டப் செய்து படக்குழுவினர் யூடியூப்பில் வெளியிட்டிருந்தனர். கடந்த மாதம் வெளியான இப்படம் 50 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. கிரிக்கெட் படம் என்பதால் வட இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.