×

“ஷாருக் கான் பெற்றோர்கள் சினிமா பின்புலம் கொண்டவர்கள்”… கங்கனா பதிவால் கிளம்பிய சர்ச்சை!

நடிகை கங்கனா ரணாவத் என்றாலே தற்போது அவருடைய சர்ச்சைக்குரிய பதிவுகள் தன நியாபகம் வருகின்றன. கங்கனா, மத்தியில் ஆளும் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருப்பதால் அந்தக் கட்சியை விமர்சிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் கங்கானாவின் சாடலுக்கு உள்ளாவது உறுதி. அதேபோல் பாலிவுட் பிரபலங்கள் பலரின் மீதும் தொடர்ந்து புகார் எழுப்பி வருகிறார். தற்போது கங்கனா தனது முதல் படமான கேங்க்ஸ்டர் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அதைப் பற்றி பகிர்ந்து கொண்ட கங்கனா, தனது
 

நடிகை கங்கனா ரணாவத் என்றாலே தற்போது அவருடைய சர்ச்சைக்குரிய பதிவுகள் தன நியாபகம் வருகின்றன.

கங்கனா, மத்தியில் ஆளும் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருப்பதால் அந்தக் கட்சியை விமர்சிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் கங்கானாவின் சாடலுக்கு உள்ளாவது உறுதி. அதேபோல் பாலிவுட் பிரபலங்கள் பலரின் மீதும் தொடர்ந்து புகார் எழுப்பி வருகிறார்.

தற்போது கங்கனா தனது முதல் படமான கேங்க்ஸ்டர் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அதைப் பற்றி பகிர்ந்து கொண்ட கங்கனா, தனது வெற்றிக் கதையை ஷாருக்கானுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவுகளால் ஷாருக் கான், சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். இது பாலிவுட்டில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஷாருக் கான் எந்த வித பின்புலமும் இன்றி அயராத கடின உழைப்பு மூலமாகத் தான் முன்னேறினார் என்று பலர் கூறி வரும் நிலையில்,கங்கானாவின் இந்தப் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“15 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கேங்க்ஸ்டர் திரைப்படம் வெளியானது. ஷாருக் கான் மற்றும் என்னுடைய கதைகள் இரண்டும் பெரிய வெற்றிக் கதைகள். ஆனால் ஷாருக் டெல்லியைச் சேர்ந்தவர். ஆங்கில வழிக் கல்வி பயின்றவர். அவரது பெற்றோர் சினிமா பின்புலம் கொண்டவர்கள். ஆனால் எனக்கு ஆங்கிலம் ஒரு வார்த்தை கூட தெரியாது.

கல்வி இல்லை, ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலிருந்து வந்தேன். ஒவ்வொரு அடியிலும் ஒரு தொலைதூர கிராமம் என் சொந்த தந்தை மற்றும் தாத்தாவுடன் தொடங்கி ஒரு போராக இருந்தது. அவர் என் வாழ்க்கையை பரிதாபமாக்கியது, 15 ஆண்டுகளுக்குப் பிறகும் இவ்வளவு வெற்றிகளுக்குப் பிறகும் இன்னும் ஒவ்வொரு நாளும் உயிர்வாழ்வதற்கக போராட்டம் தான். ஆனால் அவை எல்லாவற்றிற்கும் தற்போது ஒரு மதிப்பு கிடைத்துள்ளது. எல்லாருக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.