×

காதலரை கரம்பிடிக்கும் கங்கனா.. விரைவில் திருமண அறிவிப்பு !

 

அடுத்த சில ஆண்டுகளில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக பாலிவுட் நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துள்ள இவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இவரின் படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். 

சர்ச்சைக்குரிய கதைக்களங்களை தைரியமான எடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் வெளியான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதையடுத்து திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை நிகழ்த்திய கங்கனாவுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரப்படுத்தியது மத்திய அரசு. 

இந்நிலையில் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த அவர், நான் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மனைவியாகவும், ஒரு தாயாகவும் இருப்பேன். நான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும், அது குறித்து அறிவிப்பை நிச்சயம் விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். கங்கனா இந்த திருமண அறிவிப்புக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.