×

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கும் கங்கனா ரனாவத்!

 

நடிகை கங்கனா ரனாவத் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கும் வாழ்த்துக்கள் தான் சர்ச்சையை ஏற்படுத்துமே தவிர அவர் ஒரு சிறந்த நடிகை என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடின உழைப்பின் மூலம் சினிமாவில் உச்சத்தை அடைந்துள்ள நடிகைகளில் கங்கனா ரனாவத் ஒருவர்.

தற்போது பெண்மையக் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களிலேயே அதிகமாக நடித்து வருகிறார் கங்கனா.  ஏஎல் விஜய் இயக்கத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான 'தலைவி' படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை கங்கனா ரனாவத் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கங்கனா தற்போது வெளியிட்டுள்ள பதிவில் "ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு இனிய பயணத்திற்கான தொடக்கம். இன்று நாங்கள் இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட கட்டத்தை நோக்கி தொடங்கியுள்ளோம். பல திறமைகள் ஒன்றாக இணைந்து ஒரு சிறந்த நோக்கத்திற்கான பயணத்தை திரையில் கொண்டுவர இருக்கிறோம். இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலாக இருக்கும்" என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

கங்கனா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'ரிவால்வர் ராணி' படத்தின் இயக்குனர் சாய் கபீர் இப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.  இதையடுத்து சீதாவின் புராணக் கதையில் சீதாவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.