முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக அசத்தும் கங்கனா ரணாவத்... பர்ஸ்ட் லுக் & டீசர் வெளியானது!
முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'எமெர்ஜென்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகை கங்கனா ரனாவத் தான் பாலிவுட்டின் கவனத்திற்குரிய நடிகை. அவர் வாய் திறந்தாலே சர்ச்சை தான் என்றளவு ஆகிவிட்டது. அவர் ஒரு சிறந்த நடிகை என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடின உழைப்பின் மூலம் சினிமாவில் உச்சத்தை அடைந்துள்ள நடிகைகளில் கங்கனா ரனாவத் ஒருவர்.
இந்நிலையில் தற்போது நடிகை கங்கனா ரனாவத் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இல்லை, இந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். அப்படியானால் இப்படம் கங்கனா இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமாகும். கங்கனா முதலாவதாக அவர் நடித்த 'மணிகர்ணிகா' என்ற படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார்.
இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தை நடித்து இயக்குவதோடு கதை மற்றும் தயாரிப்பும் கங்கனா தான்.