×

"போதைப்பொருள் தடுப்பு போலீஸார் சினிமாவில் நுழைந்தால் பலர் ஜெயிலில் இருப்பார்கள்"… கங்கனா கிளம்பும் சர்ச்சை!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களாக பாலிவுட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சுஷாந்த் இறப்பிற்காக நீதி கேட்டு அவர் போராடி வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சுஷாந்த் மறைவிற்காக பல பாலிவுட் பிரபலங்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுப்பி வருகிறார். தற்போது கங்கனா பாலிவுட்டில் நடந்து வரும் போதைப்பொருள் மாஃபியா குறித்தும் சர்ச்சை பதிவுகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக
 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களாக பாலிவுட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சுஷாந்த் இறப்பிற்காக நீதி கேட்டு அவர் போராடி வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சுஷாந்த் மறைவிற்காக பல பாலிவுட் பிரபலங்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுப்பி வருகிறார்.

தற்போது கங்கனா பாலிவுட்டில் நடந்து வரும் போதைப்பொருள் மாஃபியா குறித்தும் சர்ச்சை பதிவுகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கங்கனா வெளியிட்டுள்ள பதிவுகளில்
”திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கொக்கைன்தான், இது கிட்டத்தட்ட எல்லா வீட்டு விருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்தது, ஆனால் ஆரம்பத்தில் நீங்கள் உயர்ந்த மற்றும் செல்வாக்கான வீடுகளுக்குச் செல்லும் போது இலவசமாக வழங்கப்படுகிறது, எம்.டி.எம்.ஏ படிகங்கள் தண்ணீரில் கலக்கப்படுகின்றன மற்றும் சில நேரங்களில் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அதைப் பயன்படுத்தியிருப்பீர்கள்.