கங்கனா ராணுவத்தின் மும்பை அலுவலகம் இடிப்பு… வலுக்கும் எதிர்ப்பு!
நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகம் சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி இடிக்கப்பட்டுள்ளது.
கங்கனா ரணாவத்தின் மும்பை பாலி ஹில்ஸில் உள்ள அவரது அலுவலகத்தில் 14 சட்ட விதி மீறல்கள் இருப்பதாக பிஎம்சி தெரிவித்துள்ளனர். இதனால் அவரது அலுவகத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
“நான் ஒருபோதும் தவறு செய்யவில்லை. மும்பை ஒரு ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பதை எனது எதிரிகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாக்கிஸ்தான் மற்றும் பாபர் மற்றும் அவரது படை என்றும் கூறி சாடியுள்ளார்.
“நான் மும்பை தரிசனத்திற்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் மகாராஷ்டிரா அரசாங்கமும் அவர்களது குண்டர்களும் எனது சொத்துக்களை சட்டவிரோதமாக இடிக்கத் தயாராகி விட்டனர். செல்லுங்கள்! மகாராஷ்டிராவின் பெருமையை காக்க என் ரத்தத்தையும் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். இது எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் என்னுடைய சக்தி மேலே உயர்ந்து கொண்டே இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
“எனது வீடு எந்த விதத்திலும் சட்டவிரோதமாகக் கட்டப்படவில்லை. கொரோனா காலம் என்பதால் செப்டம்பர் 30 ஆம் தேதி எந்த ஒரு கட்டிடத்தையும் இடிப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. உண்மையான பாசிசம் என்றால் என்ன என்று பாலிவுட் திரையுலகம் இப்போது பாருங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது. பலரும் கங்கனாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.