×

“என்னைப் புகழ்ந்து பேசினா நீங்க காலி”… கங்கனா மீண்டும் பகீர் பதிவு!

தன்னைப் புகழ்ந்து பேசுபவர்கள் சிக்கலில் சிக்குகிறார்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் தற்போது தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் ‘தலைவி’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கியுள்ளார். தலைவி படத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கங்கனா ரணாவத்தின் தொடர்ந்து பாலிவுட் திரையுலகம் தன்னை வஞ்சித்து வருவதாகத் தெரிவித்து வருகிறார். மேலும் தான் வெளியிடும் ஒவ்வொரு பதிவுகளிலும் தன்னைப் பற்றித் தானே
 

தன்னைப் புகழ்ந்து பேசுபவர்கள் சிக்கலில் சிக்குகிறார்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் தற்போது தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் ‘தலைவி’ படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கியுள்ளார். தலைவி படத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கங்கனா ரணாவத்தின் தொடர்ந்து பாலிவுட் திரையுலகம் தன்னை வஞ்சித்து வருவதாகத் தெரிவித்து வருகிறார். மேலும் தான் வெளியிடும் ஒவ்வொரு பதிவுகளிலும் தன்னைப் பற்றித் தானே பெருமை பேசி வருவதால் நெட்டிசன்கள் அவரை இடைவிடாமல் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகைகள் யாரும் தன் நடிப்பைப் பாராட்ட முன்வருவதில்லை என்று கூறினார்.

தற்போது அவர் அக்ஷய் குமார் போன்ற பெரிய நடிகர்களும் தன்னை வெளிப்படையாக பாராட்டாமல் தனியாக அழைத்து பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பாலிவுட் மிகவும் விரோதமானது, என்னைப் புகழ்ந்து பேசினால் கூட அது அவர்களை சிக்கலில் சிக்க வைக்கும். தலைவி படத்தைப் பாராட்டிய அக்‌ஷய் குமார் போன்ற பெரிய நட்சத்திரங்களிடமிருந்து எனக்கு பல ரகசிய அழைப்புகள் மற்றும் செய்திகள் மூலமாக பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் ஆலியா மற்றும் தீபிகா படங்களைப் போலல்லாமல் அவர்கள் என் படத்தை வெளிப்படையாக பாராட்ட மாட்டார்கள். இது திரைப்பட மாஃபியா பயங்கரவாதம்.

சினிமா ஒரு கலை என்னும் போது புறநிலையாக இருக்க விரும்புகிறது, சினிமா என்று வரும்போது அரசியலில் ஈடுபடக்கூடாது. எனது அரசியல் பார்வைகள் மற்றும் ஆன்மீகம் குறித்த பார்வைகளை வைத்து என்னை என்னை கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் தனிமைப்படுத்துதளின் இலக்காக மாற்றக்கூடாது. ஆனால் நீங்கள் அவ்வாறு செய்தால் நான் பின்னால் உங்களை வெல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.