×

மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள கங்கனா ரனாவத்!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வேளாண்மை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை குறித்து ஆரம்பத்திலிருந்தே எதிராக பேசிவரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பும் கருத்தைப் பதிவிட்டுள்ளார். ஜக்கி வாசுதேவ்
 

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வேளாண்மை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை குறித்து ஆரம்பத்திலிருந்தே எதிராக பேசிவரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பும் கருத்தைப் பதிவிட்டுள்ளார். ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு விவசாயிகள் தற்போது நடத்திவரும் போராட்டத்தை குறிப்பிட்டுள்ளதால் , கங்கனா மீது பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதும் பிரச்சினைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றை நீக்குவதும் கங்கனாவிற்கு வாடிக்கையாகிவிட்டது.

சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட மூதாட்டி ஒருவரை பற்றி ”ஷாக்கின்பாக் போராட்டக்காரர்” என்று கங்கனா பதிவிட்டிருந்தார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதை அடுத்து அவர் அந்த சர்ச்சை பதிவை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது