×

“நீங்கள் சரியான முடிவை எடுத்ததில் மகிழ்ச்சி”…பிசி ஸ்ரீராம் பதிவிற்கு கங்கனாவின் பதில்!

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், கங்கனா ரணாவத் படத்தை நிராகரித்ததாக தெரிவித்திருந்ததை அடுத்து கங்கனா அதற்கு பதிலளித்துள்ளார். சுஷாந்த் சிங் மறைவிற்கு பாலிவுட் திரைப்பட மாஃபியா கும்பல் தான் காரணம் என்று கங்கனா தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். அதற்காக சிவசேனா அரசியல் கட்சியினர் அவரை கடுமையாக சாடினார். இதனால் மும்பை வரும் அவருக்கு Y+ பாதுகாப்பு அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. கங்கனா தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்து வருவதால் அவர்
 

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், கங்கனா ரணாவத் படத்தை நிராகரித்ததாக தெரிவித்திருந்ததை அடுத்து கங்கனா அதற்கு பதிலளித்துள்ளார்.

சுஷாந்த் சிங் மறைவிற்கு பாலிவுட் திரைப்பட மாஃபியா கும்பல் தான் காரணம் என்று கங்கனா தொடர்ந்து கூறி வருகிறார்.  சமீபத்தில் மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். அதற்காக சிவசேனா அரசியல் கட்சியினர் அவரை கடுமையாக சாடினார். இதனால் மும்பை வரும் அவருக்கு Y+ பாதுகாப்பு அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.  கங்கனா தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்து வருவதால் அவர் மீது திரையுலகில் எதிர்மறையான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பலர் கங்கனாவிற்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.

நேற்று ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் “கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடிக்க இருந்த படத்தை நான் நிராகரிக்க வேண்டியிருந்தது. உண்மையில் நான் ஆழமாக  கவலைப்பட்டேன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு என் நிலைப்பாட்டை விளக்கினேன், அவர்கள் புரிந்துகொண்டார்கள். சில நேரங்களில் நமக்கு சரி என்பதே மிக முக்கியம். அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது கங்கனா ரணாவத் பிசி ஸ்ரீராமின் பதிவிற்கு பதிலளித்துள்ளார். “உங்களைப் போன்ற லெஜெண்ட்டுடன் பணிபுரியும் வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன் சார். இது முற்றிலும் என்னுடைய இழப்பு. என்னுடன் வேலை செய்வததில் உங்களுக்கு அசௌகரிய எண்ணம் ஏற்பட என்ன காரணம் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சரியான வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிசி ஸ்ரீராம் மிகவும் பாராட்டுக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.