×

இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அர்ஜுன் கபூர்!

 

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் கபூர், அன்ஷுலா கபூர், ரியா கபூர் மற்றும் கரண் பூலானி ஆகியோர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போனி கபூரும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், ஆனால் அவளர்க்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளளது. அனில் கபூருக்கும் கோவிட்-19 பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

அர்ஜுன் கபூர் மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார், அவர் இரவு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

கபூர் குடும்பத்தினர் பலர் ஒரே நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.