"திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளியே கரண் ஜோஹர் தான்"… பிரதமர் மோடியிடம் நடிகை கங்கனா குற்றசாட்டு!
நடிகை கங்கனா சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு நடிகர்களை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் சுஷாந்த் தற்கொலை தொடர்பாகவும், பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் தொடர்ந்து கரண் ஜோஹர் தான் சுஷாந்த் மரணத்திற்கு காரணம் என்று வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர் தான் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கங்கணா ட்விட்டரில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள கங்கனா
“திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளியே கரண் ஜோஹர். பலரது வாழ்க்கையையும், வேலையையும் நாசமாக்கிய பிறகும் கூட அவர் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு ஏதேனும் நம்பிக்கை உண்டா? அனைத்தும் சரியானதும் செய்யப்பட்டதும் அவரது கழுதைப்புலி கூட்டம் என்னை தேடி வரப்போகின்றன.”