×

பிரபாஸின் முடிவால் அப்செட் ஆன கரண் ஜோகர்…காரணம் இதுதானாம்!

பாஹுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் பல பாலிவுட் தயாரிப்பாளர்கள் பிரபாஸின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்புக்காக வரிசை கட்டி நிற்கின்றனராம். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் தான் பாலிவுட்டில் பாஹுபலி படத்தை விநியோகம் செய்தார். இதனால் பிரபாஸுக்கும் கரண் ஜோஹருக்கும் இடையே நல்ல நட்பு வட்டாரம் உருவானது. ஆனால் சாஹோ படத்திற்குப் பின்னர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸின் அடுத்த படத்தை கரண் ஜோகர் தன்னுடைய தர்மா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிக்க
 

பாஹுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் பல பாலிவுட் தயாரிப்பாளர்கள் பிரபாஸின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்புக்காக வரிசை கட்டி நிற்கின்றனராம். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் தான் பாலிவுட்டில் பாஹுபலி படத்தை விநியோகம் செய்தார். இதனால் பிரபாஸுக்கும் கரண் ஜோஹருக்கும் இடையே நல்ல நட்பு வட்டாரம் உருவானது.

ஆனால் சாஹோ படத்திற்குப் பின்னர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸின் அடுத்த படத்தை கரண் ஜோகர் தன்னுடைய தர்மா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிக்க விரும்பினார். ஆனால் பிரபாஸ் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான (யு.வி கிரியேஷன்ஸ்) மூலம் தயாரித்துக்கொண்டார்.

அன்றிலிருந்து ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளது. தற்போது இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தை T-Series நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க பிரபாஸ் முடிவெடுத்துள்ளார்.

 
பிரபாஸின் இந்த நடவடிக்கையால் கரண் ஜோஹர் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஹுபலி படத்தை பாலிவுட்டில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினர் ஜோகர். தற்போது அவர் மீது வாரிசு அரசியல் தொடர்பாக அதிக குற்றசாட்டுகள் எழும்பி வருவதால் பிரபாஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.