×

கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று உலகத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. தற்போது அதன் வீரியம் குறைந்தாலும் ஓமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனாவும் விட்ட பாடில்லை. ஆங்காங்கே கடமையை செவ்வனே செய்து வருகிறது.

தற்போது பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் கான் மற்றும் அம்ரிதா அரோரா இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகைகளுடன் தொடர்பு கொண்டவர்களை கோவிட் -19 (ஆர்டி-பிசிஆர்) சோதனைக்கு உட்படுத்துமாறு மும்பை குடிமை அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.


இதற்கிடையில், இந்தியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 3,46,97,860 ஆக உயர்ந்துள்ளது.