×

விவசாயிகளை தீவிரவாதிகள் என்று விமர்சித்ததாக நடிகை கங்கனா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று விமர்சித்ததாக நடிகை கங்கனா ரணாவத் மீது கர்நாடகா காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக மசோதா உள்ளிட்ட வேளாண் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு விவசாயிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை கங்கனா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “சிஏஏ பற்றி தவறான
 

விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று விமர்சித்ததாக நடிகை கங்கனா ரணாவத் மீது கர்நாடகா காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக மசோதா உள்ளிட்ட வேளாண் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு விவசாயிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகை கங்கனா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “சிஏஏ பற்றி தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி கலவரத்தை ஏற்படுத்திய அதே கும்பல் தான் இப்போது வேளாண் மசோதா குறித்து தவறான தகவல்களை பரப்பி, நாட்டில் பயங்கரவாதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள், அவர்கள் பயங்கரவாதிகள்.” என்று தெரிவித்திருந்தார்.

அதையடுத்து கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் நாயக் என்ற வழக்கறிஞர், விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று விமர்சித்ததாக கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துமகுரு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

ரமேஷ் நாயக் அளித்த புகாரைத் தொடர்ந்து கர்நாடக நீதித்துறையின் முதல் வகுப்பு (ஜே.எம்.எஃப்.சி) துமுகுரு வக்கீல் கங்கனா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு கியாடசந்திர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து கங்கனா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.