×

கத்ரினா கைப் படத்தில் இணைந்ததால் விலகிய பிரபல நடிகர்!?

நடிகர் கார்த்திக் ஆர்யன் ‘தோஸ்தானா 2’ படத்திலிருந்து விலகியுள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஆர்.கே.வின் தயாரிப்பு ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதையில் கார்த்திக் சில மாற்றங்கள் செய்ய விரும்பியதாகவும் ஆனால் படக்குழு அதை ஏற்காததால் அதிருப்தி அடைந்து அப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. மேலும் நடிகை கத்ரினா கைப் நடிப்பதிலும் கார்த்திக் ஆர்யனுக்கு விருப்பம் இல்லையாம். அது காதல் படம் என்பதால் தன்னை விட பெரியவராகத்
 

நடிகர் கார்த்திக் ஆர்யன் ‘தோஸ்தானா 2’ படத்திலிருந்து விலகியுள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஆர்.கே.வின் தயாரிப்பு ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதையில் கார்த்திக் சில மாற்றங்கள் செய்ய விரும்பியதாகவும் ஆனால் படக்குழு அதை ஏற்காததால் அதிருப்தி அடைந்து அப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. மேலும் நடிகை கத்ரினா கைப் நடிப்பதிலும் கார்த்திக் ஆர்யனுக்கு விருப்பம் இல்லையாம். அது காதல் படம் என்பதால் தன்னை விட பெரியவராகத் தோன்றும் கத்ரினா உடன் நடிப்பதில் தயக்கம் காட்டியுள்ளார்.

எனவே தர்மா புரொடக்ஷன் மீண்டும் கார்த்திக்குடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் எண்டு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் ஏற்கனவே கார்த்திக் ஆர்யன் 20 நாட்கள் நடித்திருக்கிறார். பெரிய நடிகர் ஒருவரை படத்திலிருந்து மாற்றுவது மிகவும் சிக்கலான விஷயம். எனவே தயாரிப்பு நிறுவனமும் கார்த்திக் ஆர்யனும் சமாதானம் செய்து படத்தைத் தொடருவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!