×

பிரபாஸுக்கு ஜோடியாகும் கத்ரினா கைஃப்!?

பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப், பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் பேங் பேங், வார் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கிய இயக்குனர் சித்தார்த் ஆனந்த் உடன் பிரபாஸ் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சித்தார்த் பிரபாஸிடம் சுவாரஸ்யமான கதை ஒன்றைக் கூறியதாகவும் அது பிரபாஸுக்கு பிடித்து நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகை கத்ரினா கைஃப்
 

பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப், பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

பாலிவுட்டில் பேங் பேங், வார் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கிய இயக்குனர் சித்தார்த் ஆனந்த் உடன் பிரபாஸ் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சித்தார்த் பிரபாஸிடம் சுவாரஸ்யமான கதை ஒன்றைக் கூறியதாகவும் அது பிரபாஸுக்கு பிடித்து நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிகை கத்ரினா கைஃப் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சித்தார்த் தற்போது ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் பதான் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை பிரபாஸ் உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இதற்கிடையில் பிரபாஸ், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராதே ஷ்யாம், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார், ஓம் ராத் இயக்கத்தில் ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.