மோசடி வழக்கில் சன்னி லியோனைக் கைது செய்யத் தடை விதித்த கேரள நீதிமன்றம்!
நடிகை சன்னி லியோனைக் கைது செய்ய தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை சன்னி லியோன் கேரளாவில் விடுமுறையைக் கொண்டாட வந்தார். அப்போது சன்னி லியோன் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக உறுதியளித்து ரூ .29 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லையாம்.
அதையடுத்து சன்னி லியோன், தன்னிடம் ரூ.29 லட்சம் மோசடி செய்ததாக பெரம்பவூரைச் சேர்ந்த ஆர் ஷியாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சன்னி லியோனை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு குற்றப்பிரிவுக் குழு விசாரித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பணம் கொடுத்தவர்கள் நிகழ்ச்சி நடக்கும் தேதியை ஐந்து முறை மாற்றிவிட்டனர். இதனால் தனது படங்களுக்கு தான் வழங்கிய கால் ஷீட் பாதிக்கப்பட்டது. மீண்டும் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கத் தயார் என்று சன்னி லியோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஷியாஸ் தரப்பு, சன்னி லியோன் கூறுவது பொய் என்று தெரிவித்துள்ளனர். மேலும் சன்னி லியோன் தரப்பில் ஏற்கனவே முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகை சன்னி லியோனை கைது செய்ய குற்றப்பிரிவு போலீசாருக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.