×

ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்கப்போவது இந்த நடிகை தான்… அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஆதிபுருஷ் படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடிக்கிறார். இப்படம் ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ராமராக பிரபாஸ் நடிக்க இருப்பது அனைவருக்கும் தெரியும். சீதையாக யார் நடிப்பது என்றுதான் குழப்பம் நிலவி வந்தது. முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. பின்னர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரட்டேலா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது பாலிவுட் நடிகை க்ரித்தி சானொன்
 

பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஆதிபுருஷ் படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடிக்கிறார். இப்படம் ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ராமராக பிரபாஸ் நடிக்க இருப்பது அனைவருக்கும் தெரியும். சீதையாக யார் நடிப்பது என்றுதான் குழப்பம் நிலவி வந்தது. முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. பின்னர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரட்டேலா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது பாலிவுட் நடிகை க்ரித்தி சானொன் தான் சீதையாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் சன்னி சிங் லட்சுமணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைப் அலி கான் வில்லனாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் 3டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.