×

ஓடிடி-க்கு அடித்த ஜாக்பாட்… அடுத்தடுத்து விற்பனையாகும் பெரிய படங்கள்!

கொரோனா பாதிப்பால் தியேட்டர்கள் முடங்கியதை அடுத்து தற்போது டிஜிட்டல் தளங்களில் பெரும்பாலான படங்கள் வெளியாகி வருகின்றன. ஊரடங்கிற்கு முன் எடுக்கப்பட்ட அனைத்து படங்களும் தற்போது ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி வருகிறது. ஏற்கனவே பாலிவுட்டில் 7 பெரிய படங்கள் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுஷாந்த் சிங் நடித்த தில் பச்சரே என்ற படம் ஹாட்ஸ்டாரில் ஜூலை 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் கடைசியாக நடித்த படம் இது என்பதால் இந்த படத்திற்கு
 

கொரோனா பாதிப்பால் தியேட்டர்கள் முடங்கியதை அடுத்து தற்போது டிஜிட்டல் தளங்களில் பெரும்பாலான படங்கள் வெளியாகி வருகின்றன. ஊரடங்கிற்கு முன் எடுக்கப்பட்ட அனைத்து படங்களும் தற்போது ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி வருகிறது.

ஏற்கனவே பாலிவுட்டில் 7 பெரிய படங்கள் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுஷாந்த் சிங் நடித்த தில் பச்சரே என்ற படம் ஹாட்ஸ்டாரில் ஜூலை 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் கடைசியாக நடித்த படம் இது என்பதால் இந்த படத்திற்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘பிரெஞ்ச் பிரியாணி’ என்ற படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் குமார் தயாரித்துள்ளார்.. மேலும் ராஜ்குமார் ராவ் நடித்த ஓமெர்ட்டா என்ற ZEE5 தளத்தில் வெளியாக உள்ளது.

நிவின் பாலி நடித்து பல விருதுகளை வென்ற ‘மூத்தோன்’ படம் தற்போது ZEE5 தளத்தில் வெளியாகியுள்ளது.

இதைத்தவிர இன்னும் பல பெரிய பட்ஜெட் படங்களும் கூட டிஜிட்டல் தளங்களில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.