நடிகை மிருணாள் தாக்கூர் கார் வாங்க காரணம் யார் தெரியுமா ?
Nov 29, 2025, 06:00 IST
இந்திய படவுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர், மிருணாள் தாக்கூர். அவர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த ‘சீதா ராமம்’ என்ற பான் இந்தியா படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து, அவரை பல முன்னணி நடிகர்கள் தங்கள் படத்தில் நடிக்க வைக்க கால்ஷீட் கேட்டு வருகின்றனர். இதனால் தனது சம்பளத்தை கோடிகளில் உயர்த்தியுள்ள மிருணாள் தாக்கூர், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
வாழ்க்கையில் உச்சத்துக்கு சென்ற அனைவரும் தங்களின் கடந்த கால வாழ்க்கையில் கண்டிப்பாக பல்வேறு அவமானங்களை சந்தித்திருப்பார்கள்.
அது குடும்பத்தினர் மூலமாகவோ அல்லது பணியாற்றும் இடத்திலோ, பொது இடங்களிலோ நடந்திருக்கலாம். அப்படி மிருணாள் தாக்கூர் தனது உறவினர்களால் அவமானப்படுத்தப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘எனது உறவினர்களில் சிலர், அவர்களது காரில் என்னுடைய அம்மாவை ஏற்ற மறுத்தார்கள். அன்றே நான் ஒரு முடிவு செய்தேன், சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்று. இன்று நான் விலையுயர்ந்த சொகுசான பென்ஸ் கார் வாங்கியுள்ளேன். எங்கள் குடும்பத்தில் இந்த காரை வைத்துள்ளது நான் மட்டும்தான்’ என்றார்.