×

ஆஸ்கர் ரேஸில் பிரபல பாலிவுட் நடிகையின் குறும்படம்…

இந்தியளவில் வெற்றிப்பெற்ற பாலிவுட் நடிகையின் குறும்படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடுகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யாபாலன். பெங்காலி படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் உடல் எடை கூடியதால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பின்னர் ‘டர்ட்டி பிக்சர்’ படம் மூலம் ரீயென்ட்ரி கொடுத்தார். இந்த படம் மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து ரசிகர்களிடையே பிரபலமானார் வித்யாபாலன். இந்த படத்தால் புகழின் உச்சிக்கு சென்ற வித்யாபாலனுக்கு இந்திய
 

இந்தியளவில் வெற்றிப்பெற்ற பாலிவுட் நடிகையின் குறும்படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடுகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யாபாலன். பெங்காலி படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் உடல் எடை கூடியதால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பின்னர் ‘டர்ட்டி பிக்சர்’ படம் மூலம் ரீயென்ட்ரி கொடுத்தார். இந்த படம் மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து ரசிகர்களிடையே பிரபலமானார் வித்யாபாலன்.

இந்த படத்தால் புகழின் உச்சிக்கு சென்ற வித்யாபாலனுக்கு இந்திய அரசின் தேசிய விருது கிடைத்தது. இதனால் வித்யா பாலன் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய படங்களில் நடித்து வந்த அவர், தமிழில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இந்த படத்தில் சில காட்சிகளே நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்களில் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.  

இந்நிலையில் பாலியல் சமத்துவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ‘நட்கட்’ என்ற குறும்படத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். வித்யா பாலனே தயாரித்த இந்த குறும்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து ரசிகர்களை கவர்ந்தது. இந்திய அளவில் நடைபெற்ற குறும்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான முதல் பரிசையும் ‘நட்கட்’ பெற்றது. இதைத்தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட்டது. இதில் சிறந்த குறும்படம் என்ற பிரிவில் ‘நட்கட்’ தேர்வாகியுள்ளது. இதனால் வித்யாபாலன் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர்.