×

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கு… நெருங்கிய நண்பர் கைது!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் இந்தியாவையே உலுக்கியது. அந்த வழக்கில் பல பிரபலங்களின் பெயர் அடிபட்டது. பின்னர் போதைப்பொருள் கோணத்தில் வழக்கு திரும்பியது. ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் வழக்கு தொடர்ந்து வருகிறது. தற்போது போதைப்பொருள் விசாரணை தொடர்பாக ஹைதராபாத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நண்பரும் சுஷாந்த் உடன் குடியிருந்தவரும் ஆன சித்தார்த் பிதானியை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) இன்று கைது செய்துள்ளது. முன்னதாக சித்தார்தை என்.சி.பி. விசாரித்த போதிலும், அவரை கைது செய்ய
 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் இந்தியாவையே உலுக்கியது. அந்த வழக்கில் பல பிரபலங்களின் பெயர் அடிபட்டது. பின்னர் போதைப்பொருள் கோணத்தில் வழக்கு திரும்பியது. ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் வழக்கு தொடர்ந்து வருகிறது.

தற்போது போதைப்பொருள் விசாரணை தொடர்பாக ஹைதராபாத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நண்பரும் சுஷாந்த் உடன் குடியிருந்தவரும் ஆன சித்தார்த் பிதானியை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) இன்று கைது செய்துள்ளது. முன்னதாக சித்தார்தை என்.சி.பி. விசாரித்த போதிலும், அவரை கைது செய்ய சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவர் வெளியே சுற்றி வந்தார்.

தற்போது சித்தார்த் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தது குறித்து சில தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் விவரங்கள் உட்பட சில ஆதாரங்கள் என்.சி.பிக்கு கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், சித்தார்தை என்.சி.பி. கைது செய்துள்ளது. சித்தார்த் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சித்தார்த் பற்றிய கூடுதல் விசாரணையில், மேலும் பலரின் பெயர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.