×

பாலிவுட்டில் அறிமுகமாகும் தி கிரேட் இந்தியன் கிட்சன் நடிகை!

 

மலையாள நடிகை நிமிஷா சஜயன் புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

நிமிஷா சஜயன் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். இயற்கை அழகு கொண்ட நடிகை நிமிஷா தான் நடிக்கும் படங்களில் மேக்கப் இல்லாமல் இயல்பாகவே நடிப்பதால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். 'தொன்டிமுடிதலும் ட்ரிஷாக்ஷியும்' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான நிமிஷா முதல் படத்திலே பலரது பாராட்டைப் பெற்றார். 

அதையடுத்து 'ஈடா' படத்தில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படம் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. சமீபத்தில் நடித்து வெளியான நயாட்டு படமும் பேசு பொருளாக மாறியது. 

தற்போது புதிய படத்தின் மூலம் நிமிஷா சஜயன் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். பாலிவுட்டில் இயக்குனர் ஒனிர் இயக்கத்தில் 2011-ம் ஆண்டு வெளியான 'I Am' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சிறந்த இந்தி திரைப்படத்திற்கான தேசிய விருதையும் அப்படம் வென்றது. தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. அந்தப் படத்திற்கு 'We Are' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் நிமிஷா பஹத் பாசில் உடன் 'மாலிக்' என்ற படத்தில் நடித்துள்ளது. அப்படம் விரைவில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.