இந்தியன் பனோரமா 2020: கோவா சர்வதேச திரைப்பட விழா குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
கொரோனவால் உலகமே முடங்கியருக்கும் நேரத்தில் சினிமாவும் அதற்கு விதிவிலக்கில்லை. சினிமாவின் பாதிப்பு அது சார்ந்த அனைத்தையும் பாதித்துள்ளது. வருடந்தோறும் பிரம்மாண்டமாக நடக்கும் விருது விழாக்கள் தற்போது பார்வையாளர்கள் இல்லாமல் ஆன்லைனில் நடத்தப்பட இருக்கின்றன.
அதேபோல், இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கோவா சர்வதேச திரைப்படமும் ஒன்று. இந்த விழாவில் பல பன்மொழி படங்கள் உலகெங்கிலும் இருந்து கலந்துகொள்கின்றன. இந்த வருடத்திற்கான கோவா திரைப்பட விழாவில் திரையிட படங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
இந்தியன் பனோரமா என்ற பெயரில் நடத்தப்படும் இந்த திரைப்பட விழா இந்தியாவிலேயே சிறந்த திரைப்பட விழாவாக கருதப்படுகிறது. தற்போது படங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.