×

கொரானாவால் பிரபல பாலிவுட் நடிகர் மரணம்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி…

பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் கவுல்,கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரானா என்ற கொடிய அரக்கண் தனது இரண்டாவது பணியை ஆரம்பித்துவிட்டான். இதனால் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட தொற்றுக்கு பொதுமக்கள் ஆளாகிதான் வருகின்றனர். ஏற்கனவே இந்த தொற்றால் பொதுமக்களோடு சேர்ந்து பிரபலங்களுக்கும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அமீர் கான், ஆலியா பட்,
 

பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் கவுல்,கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரானா என்ற கொடிய அரக்கண் தனது இரண்டாவது பணியை ஆரம்பித்துவிட்டான். இதனால் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட தொற்றுக்கு பொதுமக்கள் ஆளாகிதான் வருகின்றனர்.

ஏற்கனவே இந்த தொற்றால் பொதுமக்களோடு சேர்ந்து பிரபலங்களுக்கும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர், மாதவன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பழம்பெரும் இந்தி நடிகர் சதீஷ் கவுலும் இந்த தொற்றுக்கு ஆளாகியிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதோடு பிரபல தொடரான மகாபாரதத்தில் இந்திரன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.