×

நள்ளிரவில் வெளியாகும் ஷாருக்கானின் திரைப்படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்.

 

ஷாருகானின் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து வரலாற்றில் தனகென ஒரு தனி இடத்தை தக்கவைத்துள்ள ‘பதான் ‘ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில்  பதான் திரைப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் மார்ச் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதாவது இன்று நள்ளிரவு முதல் ஒளிபரப்பாகவுள்ளது. பதான் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை சுமார் நூறு கோடி கொடுத்து அந்நிறுவனம்  வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஆக்ஷ்ன திரில்லர் பாணியில் வெளியான பதான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்சைகளை சந்தித்தது, இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்காமல், எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூலை வாரிக்குவித்து புதியசாதனைகள படம் படைத்தது. அதாவது ‘பதான்’ ஐம்பது நாட்களில் 1043 கோடி வசூல் செய்தது. இப்படம் இந்தியாவில் மட்டும் 650 கோடியும், வெளிநாடுகளில் 393 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.