‘பதான்’ இரண்டாம் பாகம் உருவாகிறதா ?.. ஹோப்பி நியூஸ் சொன்ன ஷாருக்கான் !
‘பதான்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா என்பது குறித்து புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் ‘பதான்’. தொடர்ந்து இந்தி திரைப்படங்கள் தோல்வி சந்தித்து வந்த நிலையில் ‘பதான்’ படத்தின் வெற்றி பாலிவுட்டிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். சித்தார்த் ஆனந்த இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஜான் ஆபிரகாம் மிரட்டியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இந்த படம் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த படம் 5 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களை ஷாருக்கான் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆதித்ய சோப்ரா மற்றும் இயக்குனர் சித்தார்த் ஆகியோருக்கு நன்றி. கடந்த 4 ஆண்டுகளாக என்னுடைய படங்கள் வெளிவராத நிலையில் இந்த படம் வெளியாகி வெற்றிப்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை நேசிக்கும் பல லட்ச ரசிகர்கள் எனக்கு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். மேலும் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த படத்தின் தொடர்ச்சி உருவானால் அதில் நடிப்பதில் பெருமைப்படுவேன் என்று கூறினார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.