கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட படக்குழு… வீட்டு தனிமையில் ஷாருக்கான்…
தனது படக்குழுவுக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால், நடிகர் ஷாருக்கான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரானா கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் கொரானாவின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த தொற்றால் சினிமா பிரபலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர், மாதவன், கோவிந்தா உள்ளிட்ட பாலிவுட் நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதற்கிடையே ஷாருக்கான் புதிதாக நடித்து வரும் திரைப்படம் ‘பதான்’. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங்கின் துபாயில் நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த மாதம் மும்பையில் ஷூட்டிங் தொடங்கியது.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஷூட்டிங்கில் பங்கேற்றவர்களுக்கு பாதுகாப்பு கருதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஒரு சிலருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்தியது. இதையடுத்து இந்த ஷூட்டிங்கில், படக்குழுவினரோடு இருந்த நடிகர் ஷாருக்கானும் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்து வருகிறார்.