×

பாலிவுட்டில் கலவரம்… இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பயல் கோஷ் பாலியல் புகார்!

பாலிவுட் நடிகை பயல் கோஷ், தன்னை பாலியல் துன்புறுத்தியதாக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது குற்றம் சாட்டியுள்ளார். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் பயல் கோஷ். இவர் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீப காலமாக அனுராக் மீது பல குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இவர் தெரிவிக்கும் கருத்துக்கள்
 

பாலிவுட் நடிகை பயல் கோஷ், தன்னை பாலியல் துன்புறுத்தியதாக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் பயல் கோஷ். இவர் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீப காலமாக அனுராக் மீது பல குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும்பாலானவை சர்ச்சையில் முடிகின்றன. ஏற்கனவே கங்கனா ரணாவத் மற்றும் அனுராக் இருவருக்கும் இடையே பெரிய போரே நிகழ்ந்து வருகிறது.

தற்போது பயல் கோஷ் வெளியிட்டுள்ள பதிவில் “அனுராக் காஷ்யப் என்னை மிகவும் துன்புறுத்தினார், மோசமாக நடந்துகொண்டார். நரேந்திர மோடி ஜி தயவுசெய்து நடவடிக்கை எடுத்து, இந்த படைப்பாற்றல் மிக்கவரின் மறுபக்கம் இருக்கும் அரக்கனை நாடு காணச் செய்யுங்கள். இது எனக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நான் அறிவேன், எனது பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. தயவு செய்து உதவி செய்யுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நடிகை கங்கனா அனுராக்கிற்கு எதிராக களமிறங்கி பயல் கோஷுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கங்கனா அனுராக் காஷ்யப்பை கைது செய்யக் கோரிக்கை வைத்துள்ளார். “ஒவ்வொரு குரலும் முக்கியமானது” என்றும் தெரிவித்துள்ளார்.

பயல் கோஷின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தேசிய மகளிர் ஆணையம், இந்த விஷயம் குறித்து விரிவாக புகார் அளிக்குமாறு பயல் கோஷிடம் கேட்டுள்ளனர். இந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பயல் கோஷின் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளுக்கு அனுராக் காஷ்யப் இன்னும் பதிலளிக்கவில்லை.