பிரபல பின்னணி பாடகிக்கு புதிய கவுரவம்.. மராட்டிய பூஷன் விருதுக்கு தேர்வு…
பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே ‘மராட்டிய பூஷண்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் ஆஷா போஸ்லே. இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி ஆகிய 14க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியான இவர், இந்திய மொழிகளை தவிர்த்து ஆங்கிலம், ரஷ்யன், செக், மலாய் என பல அந்நிய மொழிகளில் பாடியுள்ளார்.
தமிழில் ‘ஒ பட்டர் ஃபளை பட்டர் ஃபளை’ என்ற பாடலை பாடியுள்ளார். அதைத்தொடர்ந்து மூன்றாம் பிறை, எங்க ஊர் பாட்டுக்காரன், ஹே ராம். சந்திரமுகி, இருவர் ஆகிய படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் சாதனையை பாராட்டி இரண்டு தேசிய விருதுகள், ஒன்பதுக்கும் மேற்பட்ட ஃபிலிம்பேர் விருதுகள், ‘பத்ம விபூஷன்’, தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை 12000 பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ள ஆஷா போஸ்லேக்கு மகாராட்டிரா மாநிலத்தின் உயரிய விருதான ‘மராட்டிய பூஷண்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருதை இவருக்கு அளிப்பதுடன் ரூ.10 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. இதனால் ஆஷா போஸ்லேக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.